Writer: Late Rev. Jeyachandran (popularized by Robert Roy and others)
Lyrics:
காக்கும் கரங்கள் உண்டு
கலங்காதே என் மனமே (2)
கண்மணி போல் உன்னைக் காத்திடுவார்
எந்நாளும் நடத்திடுவார் (2)
அலைகள் மோதும் படகாய்
நீ தள்ளாடுகையில்
அமைதியை உன் வாழ்வில் தந்து
ஆபத்தில் துணையாய் வருவார் (2)
உன்னத தேவன் உண்டு
உயர்த்திடுவார் உன்னை
சேற்றினின்று உன்னை எடுத்து
செல்லாக்கி காத்திடுவார் (2)
கண்ணீரின் பாதையில் நீ
நடந்து செல்கையில்
காயங்கள் ஆற்றிடுவார்
கவலைகள் மாற்றிடுவார் (2)
Scale (Key): Often in C Major or D Major.
Meter: 4/4 (Common Time).
Discover more from Christian Worship Song Lyrics
Subscribe to get the latest posts sent to your email.
